கோவை தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!

கணவன், மாமியார் தலைமறைவான நிலையில், வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை தொண்டாமுத்தூர் காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் பார்த்திபன் (33). இவர் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (20). இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாலதி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவன் பார்த்திபன், மாமியார் முருகாத்தாள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோவன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...