திருப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் காங்கேயம் சாலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா நகர் சாந்தி பட்டறை என்ற பகுதியில் பொதுக்கழிவு நீர் குழாய் செல்லும் பகுதியைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் தங்கள் வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற இயலாமல் இருப்பதாகவும், இது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



ஆனால் நகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...