கோவையில் பாஜக வெற்றியை கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டம்..!

உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதை இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர்.



கோவை: கோவையில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர்.

இன்று பஞ்சாப், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகப்படியான இடங்களை வென்றுள்ளது.



இதனைக் கொண்டாடும் விதமாக, கோவை பாஜக சார்பில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



பாஜக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.பி. முருகானந்தம் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



பொதுமக்களிடம் பாஜக வெற்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.



இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றியைக் கொண்டாடினர்.



Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...