அறியாமையா..? அக்கறையின்மையா..? விளம்பர எண்ணமா..? - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எம்.பி. நடராஜன் கேள்வி..!

பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அரைகுறை தகவல்களோடு, வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தது குறித்து கேள்வி.


கோவை: அறியாமையா..? அக்கறையின்மையா..? விளம்பர எண்ணமா..? - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு எம்.பி. நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எம்.பி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து இருப்பதாக பத்திரிக்கை செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவின் சாரம்சங்களைத் தெரிவித்து இருந்தார்.

அதில் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டே இணைக்கப்பட்டு விட்டது.

இதற்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் சேலம் கோட்டத்தை உருவாக்கினார்.

பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற ஊர்கள் மட்டுமே இன்னமும் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இருக்கின்றது. இவற்றையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என 2007 முதல் அனைத்து கட்சிகளும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து கோவையைப் பிரிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது அவரது அறியாமையைக் காட்டுகின்றது.

சேலம் ரயில்வே கோட்டம் அமைந்த பின்னும் 45 சதவீத வருவாயினை கொடுக்கும் கோயமுத்தூர் ரயில் நிலையத்திற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வில்லை என்பதால் கோவையை தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத்துள்ளது.

ஆனால் பிரச்சினை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், இது குறுத்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் அரைகுறை தகவல்களோடு, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையாது. கோவை மாவட்டத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காது.

பா.ஜ.கவில் தேசிய பொறுப்பு, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் போன்ற பொறுப்புகளுடன் இருப்பவர் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் போது கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...