கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 35 சிறுமிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்குகள் துவக்கம்..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.


கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 35 சிறுமிகளுக்காகத் துவக்கப்பட்ட அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.



உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் 10 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சல் துறை சார்பில் வங்கி சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தம் 35 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...