கோவையில் அரசுப் பள்ளிகளில் பயின்று விடாமுயற்சியுடன் தனது மருத்துவ கனவை நிறைவேற்றிய பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் காவலாளியின் மகள் பவதாரணி மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
கோவை சுந்தராபுரம் செங்கோட்டையன் அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பவதாரணி பத்தாம் வகுப்பில் 486 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தனது பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் மருத்துவம் படிக்க 11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் குரூப்பினை தேர்வு செய்து எஸ்ஆர்கே அம்மணிஅம்மாள் அரசுப் பள்ளியில் தனது மேல்நிலை கல்வியைத் தொடங்கினார். தனது மேல்நிலைப் பள்ளியில் தேர்வின் முடிவில் 600க்கு 404க்கு மதிபெண்கள் பெற்று நீட் தேர்வு எழுத தயாராகினார்.
பொள்ளாச்சியில் அரசு நடத்திய இலவச நீட் பயிற்சி வகுப்பில் கற்றுத் தேர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் 180 மதிப்பெண்களே எடுத்து தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாவது முறையாக தற்பொழுது மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ரப்பொர் (RAPPOR) அமைப்பின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தி நேர்முகத் தேர்வின் மூலம் 5 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மருத்துவம் படிக்க பயிற்சி வகுப்புக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.
இதையடுத்து, தனது மருத்துவ கல்விக்கான கனவினை நிறைவேற்ற ஈரோடு நந்து ஆயுர்வேத கல்லூரியில் தற்போது படிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.