பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.எல்.எம். மற்றும் எம்.பி.எஸ்.இ. தொழில் நுட்ப ஆய்வக துவக்க விழா..!

தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை தொழில் நுட்ப ஆய்வகம் துவக்கம்.


கோவை: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.எல்.எம். மற்றும் எம்.பி.எஸ்.இ. தொழில் நுட்ப ஆய்வக துவக்க விழா நடைபெற்றது.

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எல்.எம். என்ஜினியரிங் இந்தியா நிறுவனமும் இணைந்து தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் மாதிரி அடிப்படையிலான அமைப்புகள் சார்ந்த பொறியியல் தொழில்நுட்ப ஆய்வகம் தொடங்குவதற்கு டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியைத் தேர்வு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.எல்.எம்(PLM) மற்றும் எம்.பி.எஸ்.இ(MBSE) துறையின் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் டாக்டர் எம்.மாணிக்கம் கேப்மினி இயக்குனர் ரங்கராஜ் சிவகுமார், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி மற்றும் எம்.சி.இ.டி.கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் தலைவர் மாணிக்கம் திறந்து வைத்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக 2022ம் ஆண்டு பிரிவில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ப்ரொபஷனல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறையில் பயிலும் 33 மாணவர்கள் வருடத்திற்கு 4 லட்சம் ஊதிய அடிப்படையில் பி.எல்.எம் (PLM) துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.



எம்.பி எஸ்.இ (MBSE) துறையில் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் கேப்மினி நிறுவனம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் கூட்டமைத்து, அதிக அளவிலான தொழில் நுட்ப விற்பனையாளர்களை கொண்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்படுவதற்கான வளங்களையும், நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களையும், கேப் மினி நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது என கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...