கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்த மருத்துவப் பணியாளர்கள் பணியிட மாற்றம்..!

அறுவை சிகிச்சைப் பிரிவிலிருந்து வார்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவ பணியாளர்கள், நோயாளியிடம் 500 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்தியதால் நடவடிக்கை.


கோவை: கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நோயாளியிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்த மருத்துவ பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், உறவினரை சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவ பணியாளர்கள், நோயாளியிடம் 500 ரூபாய் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, 'என்னிடம் பணம் இல்லை; 100 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறிய நோயாளியின் மனைவியிடம், 'ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆகையால், 500 ரூபாய் தந்துதான் ஆக வேண்டும்' என கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பக்கத்து படுக்கையிலிருந்த மற்றொரு நோயாளியிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பாக, மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி ஒப்பந்த பணியாளர்கள் நான்கு பேரை பணியிலிருந்து நீக்கியும், 12 பேரை கோவை மருத்துவ கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்தும் டீன் உத்தரவிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...