கோவை விமான நிலைய பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம்

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இன்று கோவை விமான நிலைய பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை விமான நிலைய பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தனியார் விமான நிறுவன நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.



இதில் விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கோவை அவினாசி சாலையில் விமான நிலையம் வரையிலான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது:-



"சாலை விரிவாக்கம் சம்பந்தமான ஆலோசனைகளை நான் முன்வைத்தேன். இதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்".



இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக இந்த கூட்டத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...