'பேரறிவாளனுக்கு ஜாமீன்' உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சி - கு.ராமகிருஷ்ணன்

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: 30-ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவானது உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30-ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க பட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும் போது:-

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32-ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7-தமிழர்களையும் விடுதலை செய்திட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் இருக்கும் ஒரு பட்சத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமீன் அளித்து உத்தரவு வழங்கியுள்ளது.

இது உலக தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கூட கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே 10-ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றியும், நீதிமன்றம் நிரபராதி எனக்கூறியும் விடுதலை செய்யவில்லை. இதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவானது மத்திய அரசுக்கு அளித்துள்ள சமிஞ்சை எனவும், இந்த வழக்கில் இனியாவது இந்த வழக்கில் எந்த தடையும் மத்திய அரசு விதிக்காமல் தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...