ஈஷாவில்‌ இருளர்‌ பழங்குடி மக்களின்‌ இசை நிகழ்ச்சி ஆட்டம்‌, பாட்டத்துடன்‌ களைக்கட்டியது

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின்‌ ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச்‌ சேர்ந்த இருளர்‌ பழங்குடி மக்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.


கோவை: ஈஷாவில்‌ இருளர்‌ பழங்குடி மக்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சி நேற்று இரவு (மார்ச்‌ 8) கோலாகலமாக நடைபெற்றது.



ஆதியோகி முன்பு நடந்த இந்த கலை நிகழ்ச்சியில்‌ தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார்‌ கோவில்பதி, முள்ளாங்காடு, வெள்ளப்பதி உள்ளிட்ட 10-க்கும்‌ மேற்பட்ட மலைவாழ்‌ கிராமங்களைச்‌ சேர்ந்த மக்கள்‌ பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர்‌.



தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அரங்கை அதிர செய்தனர்‌.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஈஷாவிற்கு வந்திருந்த மக்கள்‌ நம்‌ பழங்குடி மக்களின்‌ இசையை மெய்மறந்து ரசித்தனர்‌. முன்னதாக, ஈஷா சம்ஸ்‌கிரிதி மாணவர்களின்‌ நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும்‌ பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ஆதியோகி திவ்ய தரிசனம்‌ முடிந்த பிறகு மக்கள்‌ அனைவருக்கும்‌ அன்னதானம்‌ வழங்கப்பட்டது.

மார்ச்‌ 5-ம்‌ தேதி தொடங்கிய 4 நாள்‌ நாட்டுப்புறக் கலை திருவிழா நேற்றுடன்‌ (மார்ச்‌ 8) நிறைவு பெற்றது. மார்ச்‌ 5-ம்‌ தேதி கரகாட்டம்‌ மற்றும்‌ காவடியாட்டமும்‌, 6-ம்‌ தேதி கட்டைக்கூத்தும்‌ நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...