ஏ.பி.வி.பி. மாணவர்கள்‌ மீது கல்லூரி நிர்வாகம்‌ எடுத்துள்ள இடைநீக்க‌ நடவடிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்‌ பஜ்ரங்தள்‌ கண்டனம்‌..!

மேலும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இடைநீக்க‌ நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: ஏ.பி.வி.பி. மாணவர்கள்‌ மீது கல்லூரி நிர்வாகம்‌ எடுத்துள்ள இடைநீக்க‌ நடவடிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்‌ பஜ்ரங்தள்‌ கடும்‌ கண்டனம்‌ விடுத்துள்ளனர்.

பஜ்ரங்தள்‌ மாவட்ட அமைப்பாளர்‌ S. மணிகண்டன்‌ மற்றும்‌ இணை அமைப்பாளர்‌ வைத்தியசாலை சதீஷ்‌ ஆகியோர்‌ கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது:-

அரசமைப்பு சட்டம்‌ தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில்‌ முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி. மாணவர்களைக் கைது செய்து சிறையில்‌ அடைத்தது மட்டுமல்லாமல்‌, பிணையில்‌ வெளியே வந்துள்ள அவர்களை கல்லூரி நிர்வாகம்‌ இடைநீக்கம் செய்திருப்பது மிகவும்‌ கண்டனத்திற்குரியது.

இவ்விசயத்தில்‌ தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இடைநீக்க‌ நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்‌. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...