பொள்ளாச்சி அருகே விவசாய மின் இணைப்பு மூலம் சட்டவிரோதமாக ஆற்றில் தண்ணீர் திருடிய விவசாயிக்கு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம்..!

மேலும், விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கிவிட்டு அனுமதிக்கு மாறாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே விவசாய மின் இணைப்பு மூலம் சட்டவிரோதமாக ஆற்றில் தண்ணீர் திருடிய விவசாயிக்கு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை பொள்ளாச்சி அருகே ஆத்துப் பொள்ளாச்சியில் விவசாய மின் இணைப்பு மூலம் சட்டவிரோதமாக ஆற்றில் தண்ணீர் திருடுவதாக கோவை மின்சார வாரிய மின் திருட்டு சிறப்புத் தடுப்பு குழுவிற்கு புகார் சென்றது.

இதைத்தொடர்ந்து, மார்ச்சநாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் மின் திருட்டு தடுப்பு சிறப்புக் குழு உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆத்துப்

பொள்ளாச்சி ஆழியாற்றில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,

விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கி விட்டு சட்டவிரோதமாக ஆழியாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் விவசாயி செந்தில் குமாரசாமி என்பவர் விவசாய மின் இணைப்பு மூலம் ஆற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டாரை ஆற்றில் இருந்து அகற்ற அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், விவசாய மின் இணைப்பிற்கு அனுமதி வாங்கிவிட்டு அனுமதிக்கு மாறாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...