திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால் கழகத்தின் அறிவிப்பை ஏற்று ராஜினாமா.
கோவை: கோவை எட்டிமடை பேரூராட்சி துணைத் தலைவர் மரகதமணி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியிட்டு கீதா ஆனந்தகுமார் எட்டிமடை பேரூராட்சி தலைவராகவும், மரகதமணி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் முதலமைச்சரை சந்திக்க சென்னை சென்றனர். அப்போது ஆய்வு செய்த போது எட்டிமடை துணைத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக 12வது வார்டு கவுன்சிலர் சுகுணா செந்தில்குமாரை திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
ஆனால், அறிவிப்பை மீறி திமுகவை சேர்ந்த 11வது வார்டு கவுன்சிலர் மரகதமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்தது. இதனால் மரகதமணியை முதலமைச்சர் சந்திக்கவில்லை.
இந்நிலையில், தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்ததை ஏற்று, எட்டிமடை பேரூராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்படி, இதற்கான ராஜினாமா கடிதத்தை எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்ப ராஜிடம் வழங்கினார்.