வெற்றிக் கோப்பையுடன் கோவை இரயில் நிலையம் திரும்பிய சிறுவர்கள் ஜெய்ஸ்னு, அலிப்ஷாவை அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கோவை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி சிறுவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சார்பில் கோவை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஏரோ ஸ்கேட்டோ பால் வீரர், வீராங்கனைகள், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கோவை மாவட்டம், கோவைப்புதூர் ஆசிரமம் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களான, ஜெய்ஸ்னூ, அலிப்ஷா ஆகிய இரு மாணவர்கள் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடினர். அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில், வெற்றிக் கோப்பையுடன் கோவை இரயில் நிலையம் திரும்பிய ஜெய்ஸ்னு, அலிப்ஷா ஆகிய இரண்டு சிறுவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மேலும், கடந்த ஐந்து வருடங்களாக சாலைகளில் பயிற்சி செய்தே இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் தமிழக முதலமைச்சர் கோவைப்புதூர் பகுதியில் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.