கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது: 1.5-கிலோ கஞ்சா பறிமுதல்!

பிரபல கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல்நிலையத்தில் ஏற்கனவே அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரத்தினபுரி, சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா தலைமையில் தலைமை காவலர்கள் சுகந்தராஜா மற்றும் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் சாஸ்திரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே வந்த உயர்தர இருசக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் என்பவரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் 1.5 கிலோ எடையில் சிறு சிறு பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...