30-சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் குடும்ப தகராறில் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42). கட்டிட மேசனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனிமொழி (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் கேஸ் காலியானது.
இதையடுத்து சரவணன் சமையல் செய்வதற்கு டீசல் வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வெகுநேரமாகியும் சரவணன் வீடு திரும்பாததால் கனிமொழி விறகு அடுப்பை வீட்டின் முன்பகுதியில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து இரவு 9:30 மணி அளவில் டீசல் வாங்கி கொண்டு சரவணன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பகுதியில் கனிமொழி விறகு வைத்து சமையல் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது தனக்கு அவமானம் என்று கூறி மனைவி கனிமொழியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் டீசல் கேனுடன் வீட்டிற்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிவிட்டு டீசலை உடலின் மேல் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து சரவணனின் சத்தம் கேட்டு உடனே, மனைவி கனிமொழி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் சரவணன் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.