மகளிர் தினமான இன்று கோவையில் பெண் கட்டுமான தொழிலாளர்களின் சிறப்பு மாநாடு

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பெண் கட்டுமான தொழிலாளர்களின் சிறப்பு மாநாடு, மகளிர் தினமான இன்று ரயில் நிலையம் எதிரில் உள்ள திவ்யோதயா அரங்கத்தில் மாவட்டத் தலைவர் ஜே.கலா தலைமையில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பெண் கட்டுமான தொழிலாளர்களின் சிறப்பு மாநாடு, மாவட்டத் தலைவர் ஜே. கலா தலைமையில் நடைபெற்றது.



அமைப்பின் செயலாளர் சி. நந்தினி. துவக்கி வைத்தார். பொருளாளர் ராணி, மாநில குழு உறுப்பினர் சத்யாசெந்தில் உள்ளிட்ட 16 முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு மாநாட்டில் கோவை மாமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திருமதி மல்லிகா புருஷோத்தமன், பிரபா ரவீந்திரன், சாந்தி சந்திரன், மோகன் மற்றும் பொள்ளாச்சி நகர்மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.



கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகி ஐஸ்வர்யா தேவி, எம்.வி.ராஜன், வழக்கறிஞர் ஏ.சுப்பிரமணியன், சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் என்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர். பாலகிருஷ்ணன், என். சோமசுந்தரம், செயலாளர்கள் கோட்டை ஆர். நாராயணன் ஆகியோர் வாழ்த்தினார்கள்.



மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) வெளிமாநில தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு காரணமாகக் கட்டுமான தொழிலில் பெண் தொழிலாளர்களுக்கும் இதர தொழிலாளர்களுக்கும் கடுமையான வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்நிலை கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. எனவே, வேலை இன்மையை ஈடு செய்யும் வகையில் 85 சதமான வேலைவாய்ப்புகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்கி சட்டம் கொண்டு வர வேண்டும்.

2) கட்டுமான தொழிலில் அனைத்து பிரிவுகளிலும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளை உத்தரவாதப்படுத்த வேண்டும், பயிற்சி காலத்திற்குச் சம்பளம் வழங்க வேண்டும்.

3) சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, கட்டுமான தொழிலில் பெண் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

4) பெண் கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 என்பதிலிருந்து 50 ஆக குறைக்க வேண்டும்.

5) மகப்பேறு கால பலன்கள் சட்டப்படி கட்டுமான துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

6) சமீபகாலமாகக் கட்டுமான பெண் தொழிலாளர் குடும்பங்களில் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள். இவ்வாறான இளம் விதவைகளுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவி நிதி வழங்கிட வேண்டும்.

ஒருமனதாகப் பெண் கட்டுமான தொழிலாளர் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்புவது என்று மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...