மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 60 பெண் போலீசாருக்கு விடுமுறை அளித்தார்.
கோவை: மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல கோவையிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள் ஒன்றாகக் கூடி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாகக் கோவை அண்ணா சிலை உள்ளிட்ட சில பகுதிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார்.

தொடர்ந்து போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு பழச் சாறு நீர் மோர் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
பின்னர் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 60 பெண் போலீசாருக்கு விடுமுறை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.