கோவையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரைக் கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது..!

விசாரணையில், குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரைக் கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த டிசம்பர் 31ம் தேதி, உடலில் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது, முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...