ஹோட்டல் உரிமையாளரின் புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: ஹோட்டலில் தகராறு செய்த விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ராம் நகர் பகுதியில் அரிஸ்டோ என்ற பெயரில் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சின்னத்தம்பி என்பவரின் மகன் ராஜா (34) என்பவர் நடத்தி வருகிறார். இவரது லாட்ஜில் மைதீன் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூன்று பேர் வந்து குடிபோதையில் தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு லாட்ஜ் மேனேஜர் மைதீன் அறை தர மறுத்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் மறுநாள் மாலை லாட்ஜுக்கு வந்த கோட்டை சேது உட்பட 4 நபர்கள் தங்களது கட்சியின் விசிட்டிங் கார்டு காண்பித்து நேற்று அதிகாலையில் அறை தர மறுத்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கோட்டை சேது மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் ஹோட்டல் உரிமையாளர் ராஜா மற்றும் மைதீனை தாக்கியுள்ளனர். இதில் ராஜாவுக்கு முகம் மற்றும் மூக்கு, தாடையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஜா காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோட்டை சேது மற்றும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.