கோவைக்கு பயிற்சிக்காக வந்திருந்த சிபிஐ காவலர் மாரடைப்பால் திடீர் மரணம்..!

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக வந்திருந்த சிபிஐ காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


கோவை: கோவைக்கு பயிற்சிக்காக வந்த சிபிஐ காவலர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சிவர்னா மாவட்டத்தைச் சேர்ந்த பி.வி. சிங் என்பவரின் மகன் அனில்குமார் (38). இவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீசாக பணி புரிந்து வந்தார். மேலும் அவருக்கு ஹெட் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு கடந்த மாதம் கிடைத்தது.

இதையடுத்து, கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக அனில்குமார் வந்திருந்தார். நேற்று காலை அணிவகுப்பு பயிற்சியை முடித்து விட்டு தனது அறைக்கு சென்ற அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிஆர்பிஎஃப் கேம்பில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...