கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா..!

இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம், வருவாய் அலுவலர் லீலா அலக்ஸ் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.



ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வில்வமரம், மகிழமரம் உட்பட 5 வகை மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மகளிர் தினத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...