கோவை மணியகாரன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தினவிழா - மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார்..!

மேலும், சென்னையில் உலக சிலம்பம் சங்கம் மூலம் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.


கோவை: கோவை மணியகாரன் பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.



இதில், தலைமை தாங்கிப் பேசிய மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறியதாவது:-

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலம் மாறி, பேரறிஞர் அண்ணா அவர்களின் கல்வித் திட்டத்தால் படித்து முன்னேற்றம் கண்டனர்.

தலைவர் கலைஞர் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கினார். இப்போது பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.

தான் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், மாணவிகளாகிய நீங்கள் தைரியத்துடன் வாழ வேண்டும், எந்த பிரச்சினைகள் என்றாலும், எந்த நேரம் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் நன்றாகப் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், என்ஜினியர் என பல உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு நாப்கின், மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களான சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை மேயர், மாணவிகளுக்கு வழங்கினார்.



மேலும், சென்னையில் உலக சிலம்பம் சங்கம் மூலம் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த 8ம் வகுப்பு மாணவி சபீதா, மற்றும் 3ம் இடம் பிடித்த 4ம் வகுப்பு மாணவி தாரணி ஆகியோருக்கு மேயர் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அந்த மாணவிகள் சிலம்பம் சுற்றிக் காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...