கோவையில் கோடை காலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கும் நிகழ்வு - மாநகர காவல் ஆணையர் துவக்கம்..!

மேலும், 3 மாதங்களுக்கு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கோடை காலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கும் நிகழ்வினை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

கோடைக்காலம் துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வருடம்தோறும் குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, இவ்வாண்டும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வினை கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.



கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட காவல் ஆணையர் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர், நீர்மோர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினார். உடன் துணை ஆணையர் உமா கலந்து கொண்டு குளிர்பானங்களை வழங்கினார்.



இதே நிகழ்வில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக மகளிர் காவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

மேலும், 3 மாதங்களுக்கு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...