உக்ரைனில் போர் மிக தீவிரமாக நடந்து வருவதால் கோவையில் உள்ள இளைஞரின் குடும்பத்தார் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
கோவை: உக்ரைன் துணை இராணுவப்படையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்து இருப்பது குறித்து மத்திய, மாநில உளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை துடியலூர் சுப்பிரமணியபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சாய்நிகேஷ் கடந்த 2019 முதல் உக்ரைனில் உள்ள நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் படித்து வந்தார், மேலும் தனியார் நிறுவனத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரால் அங்குள்ள இந்தியர்கள், சிறப்பு விமானம், இராணுவ விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாய்நிகேஷை, குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழக இளைஞர் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக ஊடகங்ளில் செய்தி வெளியானதால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் குடும்பத்தார் உடனடியாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இரண்டு நாட்களாக எந்த பதிலும் வராத நிலையில், அதன் பின் இந்திய தூதரகம் சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், அவர் அங்கு தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் தெரிவித்தாக கூறியுள்ளனர்.
இதனிடையே இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தாரிடம் சாய்நிகேஷ் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சாய்நிகேஷ் அறையில் முழுக்க இராணுவ உடையுடன் உள்ள புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளது. இராணுவத்தில் சேர ஆசை இருந்ததால் இரண்டு முறை இந்திய இராணுவத்தில் சேர முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு போதிய உயரம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் தங்கியுள்ள போது, அங்கு போர் நடந்து வருவதால் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பொதுமக்களை இராணுவத்தில் சேர அழைப்பு விடுத்த நிலையில் அங்கு இணைந்துள்ளார்.

உக்ரைனில் போர் மிக தீவிரமாக நடந்து வருவதால் கோவையில் உள்ள சாய்நிகேஷ் குடும்பத்தார் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் மன கவலையுடன் இருப்பதாகவும் இதனால் ஊடகத்திடமும் பேசவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.