தென்னை மரம் முறிந்து விழுந்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அருகே உள்ள ஆவியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி (24). இவர் கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகில் தங்கி இருந்து வீரப்பகவுண்டனூரில் உள்ள தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இதற்காக அவர் பைக்கில் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி குவாரியில் வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்குத் திரும்பினார். 

அவர் சொக்கனூர்- வீரப்பகவுண்டனூர் சாலையில் உள்ள சொக்கனூர் அருகே வந்தபோது திடீரென்று சாலை ஓரத்திலிருந்த தென்னை மரம் முறிந்து பைக்கில் வந்த விஜயகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...