போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
கோவை: கோவையில் கோவில் உண்டியலை திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை துடியலூர் அடுத்து நல்லம்பாளையம் பகுதியில் கணேச வடிவாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கோவிலிலிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து அவர்கள் வந்த பைக்கில் வைத்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரோந்து போலீசார் அவர்களை பார்த்து நிற்குமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேரன்மாநகர் பகுதி மற்றும் விலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும், மற்றொருவர் அவர்களது நண்பர் சண்முகம் (19) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.