கோவை அருகே சந்தன மரத்தை வெட்டி தப்பி ஓடிய வாலிபர்கள்; ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

இதில் ஒரு வாலிபர் அங்குத் தடுக்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரைப் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.



கோவை: கோவை நெகமம் அடுத்த பணப்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில், சந்தன மரத்தை வெட்டி வாலிபர்கள் தப்பி ஓடினர்.

கோவை நெகமம் அடுத்த பணப்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. அங்குச் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த தோட்டத்தில் 2 வாலிபர்கள் அங்கு ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பால்காரர் ஒருவர் தோட்டத்தில் 2 பேர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.

இதில் ஒரு வாலிபர் அங்குத் தடுக்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரைப் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து காயமடைந்த அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கலை சேர்ந்த முத்துக்குமார் (வயது 20) என்பதும் அவர் கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரைக் கைது செய்தனர். தப்பிச் ஓடிய மற்றொரு வாலிபர் அவரது நண்பர் சிவா மகுடபதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...