கோவை ஆலாந்துறை தனியார் கயிறு குடோன் தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தொடர்பாக, தனியார் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை ஆலாந்துறை தனியார் கயிறு குடோன் தீ விபத்து விவகாரம் தொடர்பாக, தனியார் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகபிரகாசம் (50). இவர் அதே பகுதியில் தேங்காய் நார் கயிறு உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகபிரகாசத்தின் கயிறு உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீணைப்பு துறையினர். தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த தேங்காய் நாறு கயிறுகள், தென்னை மரங்கள், மற்றும் மூன்று மின் மோட்டார்கள் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கயிறு தொழிற்சாலை அருகே உள்ள தோட்டத்தின் உரிமையாளரான துளசியம்மாள் (70) சம்பவத்தன்று தோட்டத்திலிருந்த சறுக்குகள், மரத்துண்டுகள் போன்ற கழிவுகளை ஒன்றாகப் போட்டு தீவைத்து எரித்துள்ளார்.
அப்போது அதிலிருந்து வந்த தீப்பொறிகள் அருகாமையிலிருந்த சண்முகபிரகாசம் கயிறு உற்பத்தி தொழிற்சாலையில் தீ பிடித்தது தெரியவந்தது. இதனால் ஆலந்துறை போலீசார் துளசியம்மாள் மீது (IPC 285 ) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.