கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலி..!

விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மனைவி ரங்கம்மாள் வயது (80). இவர் நேற்று கிணத்துக்கடவு பகுதிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு வந்தவர், கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரங்கம்மாள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மூலம்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...