அரசு கலைக் கல்லூரி சாலை பகுதியில் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனை அலுவலகம், நிர்வாக காரணங்களுக்காக அங்கிருந்து கோவை விமான நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
கோவை: ஏர் இந்தியா அலுவலகம் விமான நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்து துறையில் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் 1932-ம் ஆண்டு முதல் தனது விமானச் சேவையை வழங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ந் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்தின் ஒருபகுதியாக மாறியது.
இந்தநிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி சாலை பகுதியில் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனை அலுவலகம், நிர்வாக காரணங்களுக்காக அங்கிருந்து கோவை விமான நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதன்படி நாளை மறுநாள் புதன்கிழமை முதல் கோவை விமான நிலையத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏர் இந்தியா டிக்கெட் அலுவலகம் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.