திருப்பூரில் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த செய்தித்துறை அமைச்சர்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் நகராட்சி, உப்புபாளையம் பகுதியில் உள்ள குளத்தைத் தூர்வாரும் பணியைத் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணியை செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ம.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி, உப்புபாளையம் பகுதியில் உள்ள குளத்தைத் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.



அந்த வகையில், நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் 2021-22 செயல்படுத்தப்படும் என அறிவித்து, திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டலத்தில், வெள்ளகோவில் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.18.50-லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தினை சீரமைத்தல் பணி நடைபெறவுள்ளது.



இத்திட்டத்தில் 60% தொகை பணியாளர்களின் ஊதியமாகவும் 40% தொகை பொருட்களின் விலை விகிதமாகவும் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் நேரில் சென்று இத்திட்டத்தினை விளக்கமாகத் தெரிவித்து பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடையாள வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.342.00 என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. சீரமைப்பது மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் எம்.கனியரசி, நகராட்சி துணைத் தலைவர் செயற்பொறியாளர் பாலச்சந்திரன், நகராட்சி நகராட்சி உடனிருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...