கோவையில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வை 1.14 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்

கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10, மற்றும் பிளஸ்- 1, பிளஸ்-2 பொதுத் தேர்வினை மொத்தம் ஒரு லட்சத்து 14-ஆயிரத்து 96-பேர் எழுத உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தேர்வு:-

இதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ்1 மாணவர்களுக்கு மே 9ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது.

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ந் தேதியும், பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பட்டியல்:-

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 21 ஆயிரத்து 282 மாணவர்கள், 20 ஆயிரத்து 659 மாணவிகள் மொத்தம் 41 ஆயிரத்து 941 பேர் பிளஸ்1 பொதுத் தேர்வினை 17 ஆயிரத்து 503 மாணவர்கள், 19 ஆயிரத்து 657 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 160 பேர் எழுத உள்ளனர்.

பிளஸ்2 பொதுத் தேர்வினை 15-ஆயிரத்து 940-மாணவர்கள், 19-ஆயிரத்து 55-மாணவிகள் என மொத்தம் 34- ஆயிரத்து 995-பேர் எழுத உள்ளனர். கோவை மாவட்டத்தில் 10, மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வினை மொத்தம் ஒரு லட்சத்து 14-ஆயிரத்து 96-பேர் எழுத உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...