அவிநாசி தாலுக்கா கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமையாது என அரசாணை மூலம் தெளிவுபடுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு..!

விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கக்கூடிய பகுதியில் சிப்காட் தொழில் வளாகம் அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசு மற்றும் மக்களுக்கு உடல்நலக்குறைவு வரக்கூடும் என்றனர்.



திருப்பூர்: அவிநாசி தாலுக்கா கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் சிப்காட் தொழில் பூங்கா அமையாது என அரசாணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் இருக்கக்கூடிய தத்தனூர் ஊராட்சி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் தான் பிரதானமாக உள்ளது.

இந்நிலையில், தத்தனூர் ஊராட்சியில் சிப்காட் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது அந்த ஊராட்சியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் பலமுறை மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியதன் பலனாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிப்காட் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

ஆனால், கடந்த மாதம் சிப்காட் சம்பந்தமாக மறு ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்து நில அளவீடு செய்துள்ளனர். தற்பொழுது ஆய்வு செய்துள்ள புதிய பரப்பளவிற்கு உட்பட்ட இடத்தில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் ஐந்தாவது நீரேற்று நிலையம் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கக்கூடிய பகுதியில் சிப்காட் தொழில் வளாகம் அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்களுக்கு உடல்நலக்குறைவு வரக்கூடும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.



இதனால் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதியில் சிப்காட் திட்டம் ரத்து செய்து சிப்காட் அமையாது என அரசாங்கம் தெளிவுபடுத்தி அரசு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...