கோவை அரசு கலைக் கல்லூரியின் மாற்றுத் திற‌னாளி மாணவன் புலிகள் பாதுகாப்பு குறித்த ஓவியம் காலில் வரைந்து அசத்தல்..!

மேலும், இந்த‌ நிக‌ழ்ச்சியில் அரசு, தனியார், மற்றும் அரசு உதவி பெறும் 12 க‌ல்லூரிக‌ளை சார்ந்த மாண‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டனர்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மையமாகக் கொண்டு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கோவை அர‌சு கலைக்க‌ல்லூரியில் முதுகலை மற்றும் ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில‌ இல‌க்கிய‌த்தை மைய‌மாக கொண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் 5 நாள்கள் ந‌ட‌த்த‌ப‌டுகின்றன‌.

முக ஓவியம், மீம்ஸ், ர‌ங்கோலி, பேச‌ன் ப்ரைடு என போட்டிகள் இந்த‌ வார‌ம் முழுவ‌தும் ந‌டைபெற உள்ளது.



முதல் நாளான இன்று முக ஓவியப்போட்டி நடத்தப்படுகின்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியினர் ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்திய முக ஓவியங்களை வரைந்தனர்.



இதில், ஒரு குழுவிற்கு 2 பேர் பங்கேற்றனர்.



இந்த போட்டியில், அக்ப‌ர் அலி (மாற்று திற‌னாளி) என்ற முதலாம் ஆண்டு வ‌ர‌லாறு ப‌டிக்க‌கூடிய‌ மாண‌வ‌ன் புலிகளைக் காப்பது குறித்தான ஓவியத்தை காலில் வரைந்தார். அவரின் திறமை அங்கிருந்தவர்களை வியப்படையச் செய்தது.



மேலும், இந்த‌ நிக‌ழ்ச்சியில் 12 க‌ல்லூரிக‌ளை (அரசு, தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி) சார்ந்த மாண‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...