திருப்பூர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து முழுமையான ஆய்வு - திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பேட்டி..!

தார்சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு பின்பு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பேட்டி அளித்தார்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டு தென்னம்பாளையம் டி.எம்.சி காலணி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-







திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், மண்டலம் முழுவதும் பசுமையாகவும், தூய்மையாகவும், வைப்பதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் பணி இன்று தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வுக்குப் பின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தார்சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...