மேலும், உடனடியாக வாடகையைப் பெற்றுத் தரவேண்டும் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.
கோவை: கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள அரிசிக் கடை லைன் பகுதியில் 12 ஆண்டுகள் வாடகை தராமல் ஏமாற்றி வருவதாக கூறி கடை முன்பு வாரிசுதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் அரிசிக் கடை பகுதியில் பாரா இமாம் மகான் வாரிசுதாரர்கள் 22 குடும்பத்தார்கள், குழந்தைகளுடன் கையில் பதாகைகளை ஏந்தி அங்கிருந்த கடையை திறக்க விடாமல் வாடகை கேட்டு கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த பெரியகடைவீதி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாரா இமாம் மகான் வாரிசுதாரர்கள் கடைகள் முன்பு டென்ட் அமைத்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது:-
அரிசிக் கடை லைன் பகுதியில் உள்ள இடம் 22 குடும்பத்திற்கு சொந்தமான சொத்து. இதில் 20 பேர் வாடகைக்கு விட்டுள்ளோம். 10 பேர் வழக்கமாக வாடகை கொடுத்து வரும் நிலையில், மீதம் உள்ள 10 பேர் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வாடகை கொடுப்பது இல்லை இது குறித்து பல்வேறு புகார்களும் கொடுத்துள்ளோம்.

ஆனால், எங்களுக்கும் வாடகை கொடுக்காமல், நீதிமன்றத்திலும் கட்டாமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். உடனடியாக வாடகையை பெற்று தரவேண்டும் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.