ஏழை மாணவர்கள் 'சிஏ' படிக்க உதவும் தென்னிந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம்: டிசம்பர் தேர்வில், 38-மாணவர்கள் தேர்ச்சி

டிசம்பர் மாதம் நடந்த 'சிஏ' பவுண்டேஷன் தேர்வில் இந்த கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முப்பத்தி எட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



கோவை: ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் பட்டய கணக்காளர் கல்வி கற்றுத் தேர்வு எழுதக் குறைந்த கட்டணத்தில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தென்னிந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் நடத்தி வருகிறது.

டிசம்பர் மாதம் நடந்த 'சிஏ' பவுண்டேஷன் தேர்வில் இந்த கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முப்பத்தி எட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி கூறியதாவது:-

'சிஏ' என்று சொல்லக்கூடிய பட்டயக் கணக்காளர் கல்வி பவுண்டேஷன், இன்டர்மீடியட், பைனல் உள்ளிட்ட மூன்று தேர்வுகள் உள்ளடக்கியது. தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணத்தில் தென்னிந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் பலர் பட்டயக் கணக்காளர் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியப் பட்டய கணக்காளர் நிறுவனம் என்பது இந்தியப் பட்டயக் கணக்காளர்நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும்.

டிசம்பர் மாதம் நடந்த 'சிஏ' பவுண்டேஷன் தேர்வில், தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முப்பத்தி எட்டு மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இதுவரை ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

எதிர்வரும் நாட்களில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிராமப்புற மாணவ மாணவியர் மத்தியில் பட்டயக் கணக்காளர் படிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது.

தமிழக அரசுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்குப் பட்டயக் கணக்காளர் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிறப்புப் பயிற்சி வகுப்புநடத்தப்பட்டு வருகிறது. பட்டய கணக்காளர் கல்வி முடிக்கும் மாணவ மாணவியருக்கு அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜலபதி கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...