கோவையில் ஆம்னி வேன் - சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு!

புதிதாக வாங்கிய காரில் கேரளா சென்று வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 2-குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கே.ஜி.சாவடி அருகே கேரளாவிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ஆம்னி வேன், சாலை ஓரத்திலிருந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசார் அலி. இவர் அண்மையில் செகனண்ட் ஆம்னி வேன் வாங்கியதாகத் தெரிகிறது. இதனால் அந்த காரை எடுத்துக் கொண்டு நிசார் அலி மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திரன் என்பவரது குடும்பத்துடன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலுள்ள தர்காவிற்குச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து வடகரை பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கேரளாவிலிருந்து கோவை வழியாக ஈரோட்டிற்குக் கிளம்பியுள்ளனர். அப்போது ஆம்னி வேன் வாளையாறு அடுத்த கே.ஜி சாவடி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது.



இந்த விபத்தில் காரில் வந்த 3 வயது சிறுவன் மித்ரன், 5 வயது சிறுமி அஞ்சுதா ஸ்ரீ, ஆகிய இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த மோனிஷ், ராமச்சந்திரன், சரிதா, நந்திதா,அக்ஷயா, காஞ்சனா குமாரி, இந்துமதி ஆகியோர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காரில் வந்த நிசார் அலி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். புதிதாக வாங்கிய காரில் கேரளா சென்று வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...