வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் - கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் கலைஞரின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை மாநகராட்சி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


கோவை: தமிழக அரசின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை காளப்பட்டியில்கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் கலைஞரின் "வரும் முன் காப்போம்" இரண்டாவது மருத்துவ முகாமை கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை மாநகராட்சி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, முகாமில் அவர் பேசுகையில், தமிழக அரசு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஏற்கனவே 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்ற நிலையில், அதில் 1040 பேர் பயனடைந்ததாகவும், 1359 பரிசோதனைகள் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.



மேலும், இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு நலம், எலும்பு முறிவு சிகிச்சைகள், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட 10 சிறப்பு மருத்துவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில்,25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்நல மையம், 63 இடங்கள் என ரூ15.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மேயர், கல்பனா வழங்கினார்.



இந்த முகாமில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நகர் நல அலுவலர் ஜெகதீசன்,8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் பொன்னுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரகுபதி, நேருநகர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...