கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழா: சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை ஒயிலாட்டம் ஆடி அசத்தல்..!

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழாவை கலைக் குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.


கோவை: கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில், வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து ஒயிலாட்டம் ஆடினர்.



தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டத்தை இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக கற்று வருகின்றனர். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், சரவணம்பட்டி, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.



திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை, கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கணபதி, அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியர்கள் நவீன் குமார் ஜெகநாதன், பிரகாஷ் ஆறுச்சாமி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் செல்வம் குழுவினரின் பம்பை இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டமாடினர்.



கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகமாக நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...