கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி கொடுத்து காங்கிரசை சமாதானப்படுத்திய தி.மு.க..!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு பதிலாக துணைத் தலைவர் பதவி கொடுத்து காங்கிரசை தி.மு.க சமாதானப்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 3 பேர், சுயேட்சை 3 பேர் என வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மறைமுக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த நித்தியா ஜி மனோகரன் என்பவர் போட்டியிட்டார். இதில் தி.மு.க வேட்பாளர் நித்தியா 22 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸை சேர்ந்த பாலசுப்ரமணியம் 5 வாக்குகள் பெற்றார். திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாலை நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் 6வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவியில் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரச படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை திமுக வழங்கியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...