கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர்-தேர்தல் ஒத்திவைப்பு..!

மேலும், வாக்குச் சீட்டை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலர் புகார்.


கோவை: கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. அதில் திமுகவைச் சேர்ந்த 8 கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்களும் உள்ளனர். இதில் நேற்று காலை நடந்த தலைவருக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, பிற்பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கோகிலா மற்றும் அதிமுக சார்பில் கலைவாணி போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் திமுக கவுன்சிலர் ஒருவர் வாக்குச் சீட்டில் சரியாக டிக் செய்யாததால் அந்த வாக்கு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதனால் திமுக மற்றும் அதிமுக தலா 7 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திமுக கவுன்சிலர் ஒருவர் செல்லாத வாக்குச் சீட்டை அதிகாரியிடமிருந்து வாங்கிச் சென்று கிழித்து வீசினார். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மேலும் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்து ரகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கே.ஜி சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...