கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது..!

கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவையில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்னர், அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...