கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மகளிருக்கான போட்டிகள்..!

மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி போன்றவை நடைபெற்றது.



கோவை: கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மாவட்ட அளவிலான மகளிருக்கான போட்டிகள் நடைபெற்றது.

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி அரசு சார்பில் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகள் மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்றது.

அதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கான போட்டிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் 12 ஒன்றியங்களில் முதலிடத்தைப் பெற்றவர்கள் கோலப்போட்டியில் பங்கேற்றனர்.

மேலும், ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவையும் நடைபெற்றன.



உணவு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.



இந்த கோலப்போட்டிகளில் பங்கேற்றவர்களில் பலர் காய்கறிகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும் கோலமிட்டனர்.



மேலும், இதில் முதல் இடத்தை பெறுபவர்கள் நாளை சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...