கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது..!!

குப்பைக் கிடங்கில் இரண்டு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பைகளை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.

இதனிடையே, குப்பைக் கிடங்கின் மற்றொரு பகுதியில் தீ பிடித்ததால், தெற்கு தீயணைப்பு நிலையம், மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 3 வாகனம் மூலம் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாகக் காணப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...