மதுக்கரை நகராட்சியின் முதல் தலைவர் நூர்ஜஹான்; துணைத் தலைவர் ரமேஷ்

இன்று நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் நூர்ஜகான் போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: புதிதாக விரிவாக்கம் செய்ய மதுக்கரை நகராட்சியின் முதல் தலைவராக நூர்ஜகான் மற்றும் துணைத் தலைவராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதுக்கரை பேரூராட்சி கடந்த ஆண்டு, 27-வார்டுகளுடன் நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 24-இடங்களிலும், அதிமுக 3-இடங்களிலும் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஏற்கனவே திமுக தலைமை மதுக்கரை நகராட்சி 17-வது வார்டு உறுப்பினர் நூர்ஜஹானை தலைவர் வேட்பாளராகவும், 7-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது.

இதனால், இன்று நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் நூர்ஜகான் போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல் பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மதுக்கரை நகராட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மதுக்கரை நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தலில், முதல் தலைவராகப் பெண் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...