கோவை வால்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினரிடையே மோதல் - தேர்தல் ஒத்திவைப்பு..!

வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ஒத்திவைப்பு.


கோவை: கோவை வால்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது.

இதனையடுத்து, திமுக தலைமையின் சார்பாக 10வது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில், அவருக்கு எதிராக 14 வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதையடுத்து, இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.



பின்னர், கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேற்படி, தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...