திருப்பூரில் தனியார் நகை அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 லட்சம் பணம் கொள்ளை..!

இதுகுறித்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் தனியார் நகை அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகை அடகுக்கடை உள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நகைக்கடை நடத்தி வரக் கூடிய சூழ்நிலையில் கடைக்குப் பின்புறமாக வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு பகுதியில் குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று, இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.



இதனையடுத்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை உரிமையாளர் ஜெயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் கடையிலிருந்த மூன்று கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...